காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் பேட்டி.

74பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு மண்டபம் உள்ளது, இந்த காந்தி நினைவு மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்கள், காந்திஜியின் பிறந்த நாள் விழா, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்த கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன, இந்த நிலையில் காந்திஜி நூற்றாண்டு மண்டபம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது, இது டிரஸ்டுக்கு சொந்தமானது எனக் கூறி காசிலிங்கம் என்பவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில் தீடிரென
காசிலிங்கம் மற்றும் சிலர்
JCP வாகனத்துடன் அத்துமீறி காந்திஜி நூற்றாண்டு மண்டபத்திற்குள் புகுந்து அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது,
அது தொடர்பாக காவேரிப்பட்டினம் காவ நிலையத்தில்
காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும் முன்னால் மாவட்டத் தலைவருமான
எல். சுப்பிரமணியன் மற்றும் முன்னால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்து குமார் நகர தலைவர் தக்காளி தவமணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் புகார் அளிக்க சென்றனர், அப்போது புகார் மனுவை வாங்காமல் காவல் ஆய்வாளர் சரவணன் காங்கிரஸ் நிர்வாகிகளையும் காங்கிரஸ் கட்சியினர்களையும்
தகாத வார்த்தைகள் பேசி திட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கட்சிக்கும் தமிழக முதல்வர் மற்றும் எஸ். பி ஆகியோருக்கு புகார் மனுவினை அனுப்பி உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி