கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட , மத்தூர் ஒன்றியம், வாலிப்பட்டி ஊராட்சியில் MGSMT 2024-2025 மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 98. 80 இலட்சம் மதிப்பீட்டில் வாலிப்பட்டி முதல் சாணிப்பட்டி வரை தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே. மதியழகன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.