கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த மக்களுக்கு மாற்று இடம் தருவது குறித்து ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் அண்ணாநகர் மக்களோடு இணைந்து ஊத்தங்கரை எம்.எல்.ஏ. டி.எம். தமிழ்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் திரளான மக்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் நகரசெயலாளர் சிக்னல் ஆறுமுகம், ஒன்றியசெயலாளர் வேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.