கிருஷ்ணகிரி: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா

56பார்த்தது
கிருஷ்ணகிரி: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் ஒன்றியம் சிவம்பட்டி ஊராட்சியில் மாவட்ட கவுன்சில் எஸ். எஸ் சங்கர் நிதியில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா மற்றும் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட கவுன்சில் எஸ். எஸ் சங்கர் நிதியில் பயணிகள் நிழல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே‌. மதியழகன் எம். எல். ஏ கலந்து கொண்டு துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கதிரவன், ஒன்றிய செயலாளர்கள் குண. வசந்தரசு, நரசிம்மன், எக்கூர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட மருத்துவரணி துணைத் தலைவர் தென்னரசு, ஒன்றிய கவுன்சிலர் ஜீவானந்தம், ஒப்பந்ததாரரும் நெசவாளர் அணி துணை அமைப்பாளருமான அழகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி கதிர்வேல், மனோகரன், பூபதி, சந்தோஷ்குமார், அன்பு, ஜெகதீசன், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி