முன்னாள் பிரதமர் திருவுருவப்படத்திற்கு கண்ணிர் அஞ்சலி.

59பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் காந்தி நினைவு மன்றம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவரும் பொதுக்குழு உறுப்பினருமான சுப்பிரமணியம் தலைமையில் மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் மாவட்ட தலைவர்
சுப்பிரமணியம் தெரிவித்தது,
இந்திய வரலாற்றில் அழியாத தடம் பதித்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் இந்தியாவின் 13வது பாரதபிரதமராக, 2004 முதல் 2014 வரை பணியாற்றியவர் மில்லியன் கணக்கான இந்தியர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்தினார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதிலும், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதிலும் அவர் முக்கியப் பங்காற்றியவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்துக்குமார், நகர முன்னாள் தலைவர் தக்காளி தவமணி, வட்டாரத் தலைவர் செல்வராஜ், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாவித்கான், முஸ்தபா, இளைஞர் காங்கிரஸ் கவியரசு, தேவேந்திரன், ராமச்சந்திரன், கோவிந்தசாமி, அக்பர், புல்லட் மணி, கோவிந்தன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி