திமுக எம்.பி., கனிமொழி இன்று (ஜன.05) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், இபிஎஸ், சீமான், விஜய், அண்ணாமலைக்கு பள்ளியில் வைத்து கனிமொழி அரசியல் பாடம் எடுப்பது போல் ஸ்பெஷலாக 20 கிலோ கேக் ஒன்றை தயாரித்த அவரது ஆதரவாளர்கள் அதனை கனிமொழியை வைத்தே வெட்ட வைத்திருக்கின்றனர். அந்த கேக்கை பார்த்த கனிமொழி, "என்னப்பா பண்ணி வச்சிருக்கீங்க?" என்பது போல் ஷாக் ஆகிய வீடியோ வெளியாகியுள்ளது.