தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், இது குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், 6 வாரங்களில் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதனை, முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தலைமைச் செயலகம் என்ற முகவரிக்கு கருத்துக்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.