கிருஷ்ணகிரி: மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா

61பார்த்தது
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மத்தூர் ஒன்றியம், சிவம்பட்டி ஊராட்சியில் சங்கர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 27.25 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி திறப்புவிழா மற்றும் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் சிவம்பட்டி பயனாளர் நிழற்கூடம் அமைக்கும் பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மதியழகன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். 

உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், அனைத்துச் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி