திராவிட முன்னேற்றக் கழகம் இளைஞரணி அமைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட விவசாய அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூரில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இளையராஜா தலைமையில், ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி முன்னிலையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு 15 ஊராட்சிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் 100 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 16 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். முன்னதாக கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. இறுதியாக கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னை மற்றும் மா செடிகள் வழங்கப்பட்டன.
இதில் விவசாய அணி தலைவர் வெங்கட்டப்பன், துணை தலைவர் வெங்கடேசன், துணை அமைப்பாளர்கள் மணி, காமராஜ், பூபதி, ஜலபதி, மாணிக்கம், மோகன், முரளி, முருகன், நாராயணன், ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன், ரமேஷ், சரவணன், உதயகுமார், வாசுதேவன் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், மீனவர் அணி துணை அமைப்பாளர் தெய்வம், மாணவரணி துணை அமைப்பாளர் கௌதம் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.