
கிருஷ்ணகிரி: மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஒத்திவைப்பு
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் 18.2.2025 மற்றும் 19.2.2025 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல். மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 3-ம் கட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 12.2.2025 மற்றும் 13.2.2025 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து, 18.2.2025 மற்றும் 19.2.2025 ஆகிய தேதிகளில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் நடைபெறவிருந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.