ஓசூர்: புதுமைப்பெண் திட்ட விரிவாக்க பணிகள் தொடக்கம்

68பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு, சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், மதியழகன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டு 361 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி