ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளை நிறத்தில் பாம்பு ஒன்று காணப்பட்டது. அந்த வீட்டில் இருந்த துளசி செடியில் பாம்பு இருந்துள்ளது. வெள்ளை நிறத்தில் பாம்பை கண்ட உள்ளூர் மக்கள் சூலம் ஏற்றி பாம்பை வழிபட்டுள்ளனர். அங்கிருந்த பெண்கள் சிலரும் பாம்பை பார்த்ததும் பக்தியில் சாமி ஆடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.