கெமிக்கல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் தப்பிய தொழிலாளர்கள்

63பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள எஸ்பிஆர் கெமிக்கல் நிறுவனத்தில் இன்று (ஜன.5) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக நிறுவனத்தில் இருந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே அங்கு சென்ற போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி