கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'படையப்பா'. ரஜினியின் கரியரில் 'படையப்பா' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற படமாகும். ரஜினிகாந்த் தமிழ் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் வகையில் படையப்பா படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.