ஊத்தங்கரை - Uthangarai

ஊத்தங்கரை அ. ம. மே. பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராசர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராதிகா தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவரும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான அமானுல்லா முன்னிலை வகித்தார். கடந்த கல்வியாண்டில் முதல் ஐந்து மதிப்பெண்களைப் பெற்ற 30 மாணவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 மாணவிகளுக்கு நினைவு பரிசு, கேடயம் மற்றும் புத்தாடைகள், கல்வி உபகரணங்கள்  பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு நினைவு பரிசுகள், 40 மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகளை சமூக ஆர்வலரும் அலினா சில்க்ஸ் உரிமையாளருமான பாபு அப்துல் சையத், காமராசர் அறக்கட்டளை தலைவர் திருநாதன், வழக்கறிஞர் பிரபாவதி, மெடிக்கல்ஸ் சதீஷ்குமார் ஆகியோர் வழங்கி வாழ்த்தினார்கள், அப்போது சமூக ஆர்வலரும் அலினா சில்க்ஸ் உரிமையாளருமான பாபு அப்துல் சையத் அவர்களின் சேவையை பாராட்டி பேரூராட்சி சேர்மேன் அமானுல்லா நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் நூருல்லாசெரிப், பார்த்தீபன், ஷாயின்ஷா, மாது, வாகித், தாமோதரன், மோகன், இருபால் ஆசிரியர்கள்,   பெற்றோர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர்கள் ரீட்டா, சுகாம்பிகை, விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தார்கள்.

வீடியோஸ்

கிருஷ்ணகிரி
Jul 15, 2024, 09:07 IST/ஊத்தங்கரை
ஊத்தங்கரை

ஊத்தங்கரை அ. ம. மே. பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்.

Jul 15, 2024, 09:07 IST