ஊத்தங்கரையில் ஜி. கே. வாசனின் 60 வது பிறந்த நாள் விழா.
60 பேருக்கு வேட்டி சேலை வழங்கல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே வாசன் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து 60 வது பிறந்தநாளை முன்னிட்டு 60 பேருக்கு வேட்டி, புடவை வழங்கினர். நிகழ்ச்சியில் நகர தலைவர் ஜெயசங்கர், மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், மாநில செயலாளர் தசரதன், மாவட்டத் துணைத் தலைவர்
நூருல்லா செரீப், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்டத் துணைத் தலைவர் ஜெகதீசன் வட்டாரத் தலைவர்கள் சென்னகேசவன், அழகேசன், மகேந்திரன், ஏராளமான தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.