ஊத்தங்கரை: 10 ம் வகுப்பு மாணவி மாயம்
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த 15 வயது சிறுமி. இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ஆம்தேதி அன்று வீட்டில் இருந்து மாணவி, திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் இல்லாததால் இதுகுறித்து அவரது தந்தை ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் இதே பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் எனது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவரிடமிருந்து தன் மகளை மீட்டு தர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.