கொட்டாவூர் கிராமத்தில் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

82பார்த்தது
கிருஷ்ணகிரி அருகே கொட்டாவூர் கிராமத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மிலாடி நபி விழாக்குழு தலைவர் என். அஸ்லம் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கி அனைத்து பக்தர்களுக்கும் உணவு பரிமாறி மத ஒற்றுமையை வெளிப்படுத்தினர். 

இந்த நிகழ்ச்சியில் ரியாஸ், ஜாமீர், ஷாஜகான், STR நவீத், நூர், ஜஹீர், மன்சூர், பாசில், சஜ்ஜாத் அஹமத், பாசில், தபாரக், ஆரிப் ஆகியோர் கலந்து கொண்டனர். மண்டல பூஜையின் ஏற்பாடுகளை தர்மசாஸ்தா மணிகண்டன் அறக்கட்டளை நிறுவனர் அதியமான் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி