ஊத்தங்கரையில் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள் விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவில் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.