கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேய சுவாமிக்கு பால் தயிர் பஞ்சாமிர்தம் இளநீர் பன்னீர் மூலிகை திரவியங்கள் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று வேத பாராயணங்களுடன் தீபாராதனைகள் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமி மணிமண்டபத்தில் உள்ள உற்சவ ஆஞ்சநேய சுவாமிக்கு 600 லிட்டர் பால் 250 லிட்டர் இளநீர் பன்னீர் மங்கள திரவியங்கள் கொண்டு பக்தர்கள் பங்கேற்று அபிஷேகம் செய்தனர். பின்னர் வேத பாராயணங்கள் முழங்க கலசாபிஷேகம் நடைபெற்றது. காசுகளாலும் சாக்லேட்களால் செய்யப்பட்ட மாலைகள் வடை மாலைகள் அலங்கார மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.
ஊத்தங்கரை ஒன்றிய சேர்மன் உஷாராணி குமரேசன் மருத்துவர் சித்ரா லோகநாயகி பட்டாபிராமன் குப்தா பிரபு தமிழ்செல்வி முனிரத்தினம் ஆசிரியர் சிவா கஜேந்திரன் சுகுமாரன் சீனிவாசன் செல்வி விஜயலட்சுமி கவிதா பூஜா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் கோவில் பக்தர்கள் செய்திருந்தனர்.