டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 'அனைத்தும் நன்மைக்கே' என ஒற்றை வரியில் பதிலளித்துள்ளது பல விவாதங்களை எழுப்பியுள்ளது. செங்கோட்டையன் சென்னை செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையம் வருகை தந்தார். அப்போது அவரிடம், தொடர்ந்து மௌனமாக இருப்பதற்கு என்ன காரணம் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 'மௌனம் அனைத்தும் நன்மைக்கே' எனக்கூறி விட்டு புறப்பட்டார்.