கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்நிலையில் முதல் பேட்டிங் செய்துவரும் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குயிண்டன் டி காக் ஒரு ரன்னிலும், சுனில் நரேன் டக் அவுட்டும் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்தடுத்த வீரர்களும் சோபிக்காததால் 14 ஓவர்கள் முடிவில் 94 ரன்களை சேர்த்த நிலையில், கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.