விருதுநகரில் இருந்து சிவகாசிக்கு சென்ற ஆட்டோ மீது கொரியர் சர்வீஸ் வேன் மோதியதில் ஆட்டோ ஒன்று அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் செல்வம் (46), அவரது மகள் சுமித்ரா (18) நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜாக்கிரதையாக வேனை இயக்கிய ஓட்டுநர் உதயகுமார் என்பவரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.