ஐபோன் கேட்டு கையை அறுத்துக்கொண்ட கூலித்தொழிலாளி மகள்

80பார்த்தது
பீகார் மாநிலம் முங்கேரியில், காதலனுடன் பேச ரூ.1.5 இலட்சம் மதிப்புள்ள ஐபோன் கேட்டு, 18 வயது இளம்பெண் கை-மணிக்கட்டுகளை அறுத்து, தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது. கூலித்தொழிலாளியின் மகளான குஷ்பூ பிந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். "நான் லவ்வருடன் பேச ஐபோன் வேண்டும், எத்தனை லட்சமாக இருந்தால் என்ன?. அம்மா-அப்பா வாங்கித்தரவேண்டும். எனது காதலர் படிக்கிறார். அவர் என்னைத்தான் திருமணம் செய்வார்" என பெண் பேசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி