மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 22-ம் தேதி படுகொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் குழுவில் இருந்த சுபாஷ் சந்திரபோஸ், காரில் கஞ்சா கடத்திச் சென்றபோது துரத்திப் பிடிக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். இந்நிலையில், தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் பூமிநாதன் துப்பாக்கியால் சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.