சென்னை பெரவள்ளூரில் மது அருந்திவிட்டு வந்த சந்துரு என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பரோடு சேர்ந்து மது அருந்திவிட்டு வந்த சந்துருவை, ஆட்டோவில் வந்த இருவர் வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதையடுத்து, தப்பியோடிய வினோத் உள்ளிட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தலைநகர் சென்னையில் படுகொலைகள் தினசரி நடந்த வண்ணம் உள்ளன.