மியான்மரில் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச்.28) பிற்பகலில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கை பேரிடரால் இதுவரை 2,056 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,900 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தகவல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மீட்புப் பணியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.