திருப்போரூர் - Thiruporur

கடற்கரையினை தூய்மை செய்யும் பணியினை துவக்கி வைத்த ஆட்சியர்

கோவளம் கடற்கரையோர பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவக்கி வைத்ததை தொடர்ந்து நெகிழிப் பைகளை ஒழிக்கவும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி மன்றம் மற்றும் இ ஐ எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் சார்பில் இன்றைய தினம் கோவளம் கடற்கரை பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்று தூய்மைப்படுத்தும் பணியினை துவக்கி வைத்தார் கடற்கரை ஓரப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றியும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தவர் நெகிழி உள்ளிட்ட பொருட்களை கடற்கரை ஓரங்களில் போடுவதால் கடலின் நிறம் மாறி மாசாகி விடுகிறது இயற்கையை காக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது நிகழ்ச்சியில் சப் கலெக்டர் நாராயண சர்மா பி டி ஓ சிவகலைச்செல்வன் உள்ளிட்டோருடன் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் தனியார் தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

வீடியோஸ்