திருப்போரூர் - Thiruporur

திருப்போரூர் கட்டுமான தொழிலாளர்கள் தங்கும் கூடத்தில் சோதனை

திருப்போரூர் கட்டுமான தொழிலாளர்கள் தங்கும் கூடத்தில் சோதனை

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூர் கிராமத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் தங்கும் கட்டடம் உள்ளது. இங்கு, 1, 000 பேர் தங்கும் இடவசதியுடன் உள்ள இங்கு, தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கலெக்டர் அருண்ராஜ் மேற்கண்ட பயிற்சி மையத்தை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தற்போது, அங்கு நிலவும் குடிநீர் பிரச்னையை சரிசெய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதேபோல், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இக்கட்டடத்தில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை தங்க வைப்பதற்கான முன்னேற்பாடு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயணசர்மா, தொழிலாளர் நலத்துறை கூடுதல் கமிஷனர்கள் தர்மசீலன், திவ்யநாதன், தமிழ்நாடு கட்டுமான கழக இயக்குனர் செந்தில்குமாரி உட்பட பலர் உடனிருந்தனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా