செங்கையில் அதிமுக நகர IT WING செயலாளர் மீது திமுக தாக்குதல்

51பார்த்தது
செங்கல்பட்டில் முதல்வர் வரும் நேரத்தில் பரபரப்பு


செங்கல்பட்டில் அதிமுக நகர IT WING செயலாளர் மீது திமுகவினர் தாக்குதல்.!!

தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதி

செங்கல்பட்டில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க தமிழக முதல்வர் வர உள்ள நிலையில் அரசு அதிகாரிகளும் திமுகவினரும் பல்வேறு அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர்

அந்த வகையில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதியைச் சேர்ந்த திமுகவினர் முதல்வர் வருகைக்கா குவிந்து வரும் நிலையில் செங்கல்பட்டு அதிமுக நகர கழக ஐடி வின் செயலாளராக உள்ள அனிருத் என்கிற இளைஞர் வழக்கறிஞராக உள்ளார்

இவர் இன்று வழக்கம் போல் வீட்டில் இருந்து தனது காரில் நீதிமன்றம் செல்லும் வழியில் ராட்டின கிணறு பகுதி அருகே அனிருத் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அங்கிருந்து சில திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அனிருத் வந்த காரில் அணிந்திருந்த அதிமுக கொடினையும் அனிருத்தையும் இழிவாக பேசி செருப்புகளால் கார்மீதும் வீசியும் அராஜகப் போக்கில் தாக்கியுள்ளனர்

காயமடைந்த அனிருத் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி