சோத்துப்பாக்கத்தில் முருகர் கோவில் கும்பாபிஷேக விழா

82பார்த்தது
சோத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா


செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம்,
நவகிரக ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இதனை அடுத்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள், விசேஷ திரவிய ஹோமம், பூர்ணாவதி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரினை ஏக சாலையிலிருந்து விமான கோபுர கலசத்திற்கு சிவாச்சாரர்கள் புனித நீர் எடுத்து செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி