

மாமல்லபுரத்தில் தவெக கூட்டத்தில் 21-வகையான உணவு வகைகள்
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்திற்கு வருகை தந்துள்ள நிர்வாகிகளுக்கு 21 வகையான சைவ உணவு வழங்கப்பட உள்ளது. சுமார் 3000 பேர் வரை சாப்பிடக்கூடிய அளவில் உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. கேரட் அல்வா, கோபி 65, மசாலா வடை, பூரி, உருளைக்கிழங்கு பட்டாணி சப்ஜி, வெஜ் பிரியாணி, தயிர் ரைத்தா, வெள்ளை சாதம், பிரிஞ்சி, முருங்கை முள்ளங்கி குடைமிளகாய் சாம்பார், மாங்காய் கத்தரி கார குழம்பு, பூசணி சௌ சௌ கூட்டு, பீன்ஸ் பருப்பு உசிலி, பூண்டு ரசம், மோர், அப்பளம், ஊறுகாய், அட பிரதமன், உப்பு, வெண்ணிலா ஐஸ்கிரீம், வாழைப்பழம் மற்றும் தண்ணீர் பாட்டில் என மொத்தம் 21 வகையான உணவுகள் பரிமாறப்பட உள்ளது.