

சோத்துப்பாக்கம் ரயில்வே கேட்டை கனரக வாகனம் மோதி பழுது
ரயில்வே கேட்டை கனரக வாகனம் சேதப்படுத்தியதால் பழுது ஏற்பட்டு திறக்க முடியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே வந்தவாசியில் இருந்து செய்யூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலை செல்லும் சாலையின் குறுக்கே சோத்துப்பாக்கம் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் அடிக்கடி மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில் கனரக லாரி ஒன்று கேட்டின் மீது மோதி சேதப்படுத்தியது. இதனால் திறக்க முடியாததால் ரயில்வே ஊழியர்கள் வந்து பழுது சரி செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்ததால் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். உடனடியாக புதிய பழுதுபாடு மாற்றப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டன.