பலமுறை மனு அளித்தும் மூன்று தலைமுறையாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வருவாய் துறை ஆய்வாளரை முற்றுகையிட்டனர்
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் தெரு காமராஜர் நகர் வடபாதி உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர் ஆனால் இதுவரை பட்ட வழங்காததால் மின் இணைப்பு வங்கியில் கடன் பெறுவது சிரமமாக உள்ளது எனவும் மின் இணைப்பு இலலாததால் படிப்பதற்கு பிள்ளைகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மந்திரியிடமும் வருவாய்த்துறை அதிகாரியிடமும் பட்டா கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் மாமண்டூர் வருவாய் துறை ஆய்வாளர் பார்த்தசாரதியை முற்றுகை யிட்டனர் பின்பு அங்கு வந்த காவல்துறையினர் மதுராந்தகம் வட்டாட்சியர் வரவைத்து பொது மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
மதுராந்தகம் வட்டாட்சியர் கணேசன் பட்டா வழங்குவதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் அரசு வழிகாட்டுதலின்படி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் அதன் பின் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.