கடல் வழி தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 9 மாநிலங்களைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பெண் வீரர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு பிரிவுகளாக மேற்குவங்கம் முதல் கன்னியாகுமாரி வரை ஒரு பிரிவாகவும், குஜராத் முதல் கன்னியாகுமரி வரை மற்றொரு பிரிவாகவும் சைக்லோத்தான் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர், கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி தொடங்கிய இந்த பயணம் ஒடிசா ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் வழியாக சீனியர் கமாண்டர் அகிலேஷ் குமார் சுக்லா தலைமையில் கல்பாக்கம் வந்தடைந்தது, கல்பாக்கம் வந்தடைந்த வீரர்களுக்கு சென்னை அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா தலைமையில் சதுரங்கப்பட்டினம் டச்சுக்கோட்டை வளாகத்தில் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுப்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் காயத்ரி தனபால், முன்னாள் எம் எல் ஏ தனபால் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அணுசக்தி துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த பயணமானது ஏப்ரல் ஒன்றாம் தேதி கன்னியாகுமரியில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.