மதுராந்தகம் நகர திமுக சார்பில் மத்திய அமைச்சர் அவர்களின் திருவுருவ படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு மக்களையும் தமிழ்நாடு அரசையும் அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர திமுக சார்பில் மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள
கலைஞர் சிலை முன்பு நகர செயலாளர் குமார் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட திமுக நிர்வாகிகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு மக்களையும் தமிழ்நாடு அரசையும் அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான கண்டித்து அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் இதனைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடைய திருஉருவ படத்தை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.