கூவத்துர் அடுத்த வடபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கியும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தியும் ஊர்வலமாக சென்றனர்.
வடபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் தனது ஊராட்சி மக்களின் ஒத்துழைப்போடு ரூபாய் 1 லட்சம் மதிப்பில் டேபிள் பீரோ சேர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த வடபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது இப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதம் ஊராட்சி மக்களின் ஒத்துழைப்போடு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா மற்றும் தலைமை ஆசிரியர் ஓய்வு பெரும் விழா பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக லத்தூர் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு ஆகியோர் கலந்து கொண்டு தொடக்க பள்ளிக்கு சீர் வரிசை பொருட்களான டேபிள், சேர், பீரோ, உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கி பள்ளி தலைமை ஆசிரியர் அர்ஜூனன் ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தியதுடன் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி வடபட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து மேல தாளங்கள் முழங்க சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று ஊர்வலமாக எடுத்துச் சென்று சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.