திருப்போருர் கந்தசுவாமி திருகோயில் திருகல்யாண வைபவம்

68பார்த்தது
திருப்போருர் அருள்மிகு கந்தசுவாமி திருகோயில் மாசிமாத பிரம்மோற்சவத்தின் இறுதி நிகழ்வான இன்று திருகல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்துகொன்டு முருகப்பெருமானை தரிசணம் செய்தனர்.


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 03 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இதில், நாள்தோறும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்கள் மீது உற்சவர் ஶ்ரீ கந்தசாமி பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராய் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 13ஆம் நாள் உற்ச்சவமான திருகல்யாண வைபோவம் இன்று நடைபெற்றது முருகபெருமான் வள்ளி தெய்வானையுடன் புஷ்ப அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர் பூஜை பரிகாரங்கள் செய்யப்பட்டு மேளதாளங்கள் வாணவேடிக்கை முழங்க பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் முருக பெருமான் வள்ளிக்கு திருமாங்கல்யம் செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர், மலர் அலங்காரத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வயானையுடன் தம்பதி சமேதராய் எழுந்தருளி மயில் வாகனத்தில் காட்சியளித்தார் தொடர்ந்து நான்கு மாத வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி