நடுவகரையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா

60பார்த்தது
திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவகரை ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திருக்கழுக்குன்றம் சேர்மன் ஆர்டி அரசு துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் பேரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தலைமையில் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக திருக்கழுக்குன்றம் சேர்மன் ஆர் டி அரசு திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் எடையாத்தூர் சரவணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர் இதில் சுற்றுப்புற கிராமங்களான ஜம்பேரி, குன்னவாக்கம், கொல்லமேடு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயனடைவர் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கோமதி பெருமாள் ஊராட்சி மன்ற தலைவர் நித்தியானந்தம் துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி