ஆத்தூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு; வாகன ஓட்டிகள் கவலை

78பார்த்தது
மத்திய அரசு பராமரித்து வரும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது வழக்கமாக இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழ்நாட்டில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதியதாக 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் 40 இல் ஏப்ரல் 1 முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 

வாகனங்கள் வகையைப் பொறுத்து சுங்கச்சாவடி கட்டணம் ஐந்து ரூபாய் முதல் 75 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது. சென்னையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி, சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மொத்தம் 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி