பெரும்பாக்கத்தில் பேருந்து வசதியின்றி தவிக்கும் மக்கள்

63பார்த்தது
மதுராந்தகம் அருகே பேருந்து வசதியின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்

தோப்புப் பகுதி வழியில் அச்சத்துடன் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சியில் சேனியர் மேடு என்னும் இருளர் பகுதி உள்ளது அதில் 35 குடும்பங்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்

இந்நிலையில் அப்பகுதிக்கு பேருந்து வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்

அத்தியாவசிய தேவைக்காகவோ மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றல் பேருந்தில் செல்வதற்கு ஒரத்தூர் கூட்டு சாலைக்கு செல்ல வேண்டும் அல்லது கீழாமூர் கூட்டு சாலைக்கு செல்ல வேண்டும் இப்படிச் சென்றாலும் நான்கு கிலோமீட்டர் அப்படி சென்றாலும் நான்கு கிலோமீட்டர் இடையில் மாட்டிக் கொண்டு பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவோம் என்று கூறுகின்றனர்

குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி செல்வதற்கு தோப்புப் பகுதி சாலையில் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்

மாலையில் கூடுதல்(special class) வகுப்புகள் வைத்தால் ஏழு மணி கூட ஆகிவிடுகிறது என்று பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர்

தமிழக அரசு எங்கள் வழித்தடத்தில் ஏதாவது ஒரு மினி பஸ் ஏற்பாடு செய்தால் கூட போதும் நாங்கள் பாதுகாப்புடன் சென்று வருவோம் என பள்ளி மாணவி மற்றும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி