மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேனா பென்சில் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் இயங்கி வரும் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு மதுராந்தகம் நகர தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பள்ளியின் நுழைவு வாயில் நின்று கொண்டு தேர்வு எழுத செல்லும் மாணவிகளுக்கு பேனா பென்சில் ரப்பர் என வழங்கி தேர்வில் வெற்றி பெற மாணவிகளுக்கு வாழ்த்துக்களை கூறினார்கள்மாணவிகளும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வழங்கப்பட்ட எழுதுகோல் உபகரணப் பொருட்களை வாங்கிச் உற்சாகத்துடன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றனர்இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக் கழகத்தின் மாணவர் அணி தலைவர் நரேந்திரன் மதுராந்தகம் நகரத் தலைவர் பெருமாள் நகர செயலாளர் ராஜேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.