ஆலந்தூர் - Alandur

2 மாதமாக கிடப்பில் போடப்பட்ட பெருக்கரணை சாலை சீரமைப்பு

2 மாதமாக கிடப்பில் போடப்பட்ட பெருக்கரணை சாலை சீரமைப்பு

சித்தாமூர் அருகே பழவூர் கிராமத்தில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு நெடுஞ்சாலையில் இருந்து, பெருக்கரணை கிராமத்திற்கு செல்லும், 3. 6 கி. மீ. , அளவிலான தார் சாலை உள்ளது. சாலையை கன்னிமங்கலம், கரிக்கந்தாங்கல் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து இருந்ததால், சாலையை சீரமைக்க, கடந்த ஆண்டு, 5. 03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் சாலை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. கடந்த இரண்டு மாதங்களாக, சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்டும், சாலை அமைக்கப்படவில்லை. அதனால், சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து, செய்தி வெளியானது இதை அடுத்து , நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தார் சாலை அமைக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

வீடியோஸ்