அச்சரப்பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்ற கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது தற்காலிக அரசு பேருந்து ஓட்டுனரால் விபத்து ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அரப்பேடு சந்திப்பில் கார் மற்றும் இருசக்கர வாகனம் சாலையை கடக்க முயன்ற போது கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி செல்லும் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து விபத்து ஏற்பட்டது.
இதில் அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் உயிர் தப்பினர். மேலும் பேருந்தில் பயணித்த பயணிகள் சிறுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அச்சரப்பாக்கம் போலீசார் பயணிகளை மீட்டு மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்பட்ட பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் மாற்று அரசு பேருந்து வராததால் கடும் அவதிக்கு உள்ளாகினர்.