தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது, வருவாய்த்துறையில் பணியாற்றும் அனைத்து உதவியாளர்களுக்கும் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். அலுவலக பணிநேரத்தை, காலை 10:00 மணி முதல், மாலை 5:45 மணி வரை என்பதை உறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.