நம் இந்திய நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் அன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆப்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட நிலையில் தங்களது பகுதிகளில் தேவைப்படும் திட்டங்களையும் அப்பகுதியில் உள்ள குறைகளையும் மனுவாக சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் வழங்கினர்.
இந்த கிராம சபை கூட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட முக்கிய தீர்மானங்கள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பேசிய செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் கூறுகையில் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக முதல்வர் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார் எனவும் இந்த பகுதியில் சுமார் 30,000 மேற்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குகிறார் எனவும் தெரிவித்தார். பின்பு நீங்கள் கேட்டது போல் ஆப்பூர் ஊராட்சிக்கு தனியாக விடியல் அரசு பேருந்து மகளிர்களுக்காக விடப்படும் எனவும் உறுதியளித்தார்.