செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில் கொளத்துார், வெண்பாக்கம் ஆகிய இரண்டு கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் கடந்த 2022ம் ஆண்டு தெள்ளிமேடு -- பாலுார் சாலையில், வெண்பாக்கம் முருகன் கோவில் அருகில் கண்காணிப்பு கேமராக்கள், ஊராட்சி சார்பில் வைக்கப்பட்டன.இதன் காட்சிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.இந்த கேமராக்கள், பாலுார் போலீசார் குற்றவாளிகளை கண்காணிக்க வசதியாக இருந்து வந்தன. இந்நிலையில், இரும்பு கம்பத்தில் அமைக்கப்பட்டு இருந்த நான்கு கேமராக்கள் மாயமாகி உள்ளன.இதன் காரணமாக, இந்த பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பதில், போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.