செம்பூரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

53பார்த்தது
கல்பாக்கம் அணுமின் நிலையப் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி! செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் செம்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 75 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தக் கிராமத்தின் அருகில் உள்ள கல்பாக்கத்தில் செயல்படும் சென்னை அணுமின் நிலையத்தில் ஆண்டுதோறும் அருகில் உள்ள கிராமங்களுக்கு சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் செம்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்குப் போதிய வகுப்பறைக் கட்டிடம் இல்லை என அந்தக் கிராமப் பொதுமக்கள் சென்னை அணுமின் நிலைய அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை அணுமின் நிலையம் சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைக் கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுப் பெருந்தலைவர் சாந்தி ராமச்சந்திரன், சென்னை அணுமின் நிலையத் தலைவர் சேஷய்யா ஆகியோர் கலந்துகொண்டு புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜைப் பணியைத் தொடங்கிவைத்து பின்னர் அப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாரத்தில் மூன்று நாள் கடலைமிட்டாய் வழங்கும் நிகழ்ச்சியையும் த

தொடர்புடைய செய்தி