தவெக ஆண்டு விழா பேனர்களில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக GETOUT என்கிற ஹேஷ்டேக்குடன் 6 பாயிண்டுகள் இடம்பெற்றுள்ளன. சாமானியர்களுக்கு எதிராக வன்முறைகளை தடுக்காமல் செயலற்று இருப்பது, ஒரு சிலரின் பேராசை பசிக்காக நடக்கும் திட்டமிடப்பட்ட சுரண்டல், பெண்கள் பாதுகாப்புக்கும் நலனுக்கும் எதிராக பொறுப்பற்ற தன்மை, விமர்சனத்துக்கு அஞ்சி மக்களின் குரலை ஒடுக்கும் கோழைத்தனம், வாக்கு வங்கிகளுக்காக சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகம்.