படூரில் மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்ற ஊராட்சி மன்ற தலைவர்

59பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குச் சேர்ந்த படூர் ஊராட்சியில் கடந்த ஆண்டு நாள்காட்டி வழங்கும்போது நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து இலவச கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச்சிடப்பட்ட நாள்காட்டியை வழங்கி புதிய திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் பொதுமக்களிடையே அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் படூர் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்வி சுற்றுலா செல்வதற்கு ஆர்வம் காட்டிய நிலையில், அதில் நன்றாக படிக்கும் 24 மாணவர்களை தேர்வு செய்து புதுதில்லியில் உள்ள சுற்றுலாத்தலங்களை காண்பதற்கு மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை மற்றும் படூர் ஊராட்சி மன்ற நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்து கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி அன்று தனி வாகனத்தில் சென்னை செந்திரல் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, ரயில் மூலம் புதுதெல்லிக்கு 27 மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தனியார் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. அதில் புதுதெல்லியில் உள்ள முக்கிய இடங்களான இந்தியா கேட்வே, தாஜ்மஹால், லால் கிலா, ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகம், குடியரசுத் தலைவர் மாளிகை, பாராளுமன்றம் உள்ளிட்ட இடங்களை மாணவர்கள் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி